வடமாகாண ஆளுநர் எமக்கு சாதகமான பதிலை வழங்கினார்! சிவகரன் சுகந்தி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பின் போது வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சாதகமான பதிலை வழங்கியுள்ளர் என வடமாகாண சுகாதார தொண்டர்களின் தலைவி சிவகரன் சுகந்தி தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது சுகாதார தொண்டர்களில் 45 வயதினை தாண்டியவர் பல பேர் வடமாகாணத்தில் உள்ளனர். அந்த அடிப்படையில் ஆளுநர் எமக்கு சாதகமான பதிலேயே வழங்கியுள்ளார்.

ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக பணியாற்றவர்கள் என்ற ஒர் காரணத்தினால் வயதெல்லையினை 50வயது வரை நீடிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேர்முகதேர்வு இடம்பெற்றது. அந்த நேர்முக தேர்வின் புள்ளி அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும் என ஆளுநர் தெரிவித்திருந்தார்.

எனினும் இதில் சுகாதார தொண்டர்கள் யாராவது விடுபடுபவார்களாகவிருந்தால் சம்பந்தபட்டவர்களை தங்களுடன் கலந்துரையாடுமாறு தெரிவித்து எமக்கு சாதகமான பதிலேயே வழங்கியிருந்தார்.

இவ்வாறானதொரு இறுதி முடிவுக்காகவே வடமாகாண சுகாதார தொண்டர்கள் அனைவரும் காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers