4611 சமுர்த்தி பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா சின்ன புதுக்குளம் வங்கி மற்றும் வேப்பங்குளம் வங்கி ஊடாக 4611 பயனாளிகளுக்கு மாதாந்தம் சமுர்த்தி பணம் பெறுவதர்கான உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வங்கி மட்டத்திலான புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா பிரதேசத்துக்குட்பட்ட சின்ன புதுக்குளம் மற்றும் வேப்பங்குளம் வங்கியில் இடம்பெற்றுள்ளது

குறித்த நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நாடு பூராகவும் 6 இலட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர், இத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 11,555 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

வவுனியா சின்ன புதுக்குளம் வாங்கி ஊடாக 1956 நபர்களுக்கும், வேப்பங்குளம் வாங்கி ஊடாக 2675 நபர்களுக்கும் புதிய சமுர்த்தி உரிமைப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா சமுர்த்தி பணிப்பாளர் பத்மரஞ்சன், ஐக்கியத் தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, தலைமைப்பீடம் முகாமையாளர் சந்திரகுமார் சர்வலோஜினி, சிரேஷ்ட முகாமையாளர்களான வில்வராஜா மற்றும் பாலசேகர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers