திணறும் அரசாங்கம் - அம்பாறையில் பல்வேறு இடங்களில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

கல்முனை வடக்கு பிரதேசத்தை தரமுயர்த்த வேண்டி 3வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக நாவிதன்வெளி பிரதேசத்திலும் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்த்தில் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள், மதகுருக்கள், இளைஞர்களும் இந்த அடையாள உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து காரைதீவு பிரதேசத்திலும் அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers