உண்ணாவிரத போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் இன்னும் சாதகமான பதிலை தரவில்லை

Report Print Rusath in சமூகம்

நாங்கள் ஆழமாக சிந்தித்து பார்க்கின்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமையே இந்த பிரதேச செயலகம் இதுவரை தரமுயர்தப்படாமைக்கான காரணம் என நாங்கள் உணர்கின்றோமென ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்க தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக மூன்றாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அரச அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இன்னும் சாதகமான பதிலைதரவில்லை.

இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. நாங்கள் வாக்களித்து அனுப்பிய அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே தற்போது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காரணமாகும்.

தற்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் கணக்கு பார்க்கின்றனர். கல்முனையில் இருக்கின்ற வாக்குகளைக் கொண்டு ஒரு உறுப்பினரை தெரிவு செய்ய முடியாது என்று எண்ணியே இந்த பிரச்சினையை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers