வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஹொரவ்பொத்தான - கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மொரவெவ பகுதியிலிருந்து ரொட்டவெவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது ஹொரவ்பொத்தான பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ் விபத்துடன் தொடர்புடைய சீமெந்து லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers