தெஹிவளை வர்த்தக நிலையத்திற்குள் மர்ம நபர் அட்டகாசம்! ஒருவர் குத்திக் கொலை

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கடையின் உரிமையாளரைக் குத்திக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 3மணியளவில் தெஹிவளையில் அமைந்துள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த மர்மநபர், அதன் உரிமையாளரிடம் கப்பம் கேட்டதாகவும் அதனை வழங்க மறுத்ததால் குறித்த மர்ம நபர் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான அப்துல் அசீஸ் (60) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார் என மருததுவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.