கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண்! விஷம் அருந்திய நிலையில் நபரொருவர் மீட்பு

Report Print Steephen Steephen in சமூகம்

கேகாலை மாவட்டம், தெரணியகலை பொலிஸ் பிரிவின் ரணஹங்கந்த பிரதேசத்தில் நேற்று கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரணஹிங்கந்த, தெரணியகலை என்ற முகவரியில் வசித்து வந்த 37 வயதான நிலந்தி ரத்நாயக்க என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் தெரணியகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணுடன் மறைமுகமான உறவை வைத்திருந்த வாய் பேச முடியாத நபரொருவர் இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலை செய்த நபர், விஷம் அருந்தி அங்கு விழுந்து கிடந்துள்ளார்.

அந்த நபரை மீட்க பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தெரணியகலை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.