முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கான வைத்திய நிபுணர் இன்மையால் பாதிப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கான மகப்பேற்று வைத்திய நிபுணர் மற்றும் மயக்கமருந்து வைத்திய நிபுணர் இன்மையால் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எம். உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை பற்றி ஆராயப்பட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலை காணப்படுகின்றது.

யுத்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்ற வைத்தியத்துறைக்கான வெற்றிடங்கள் தொடர்ந்தும் நிரப்பப்படாத நிலை காணப்படுகின்றது.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாவட்டப் பொதுவைத்தியசாலை ஆதார வைத்தியசாலைகள் மாவட்ட வைத்தியசாலைகள், ஆரம்ப சுகாதார வைத்திய நிலையங்கள் உள்ளடங்கலாக பதினாறுக்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன.

கடந்த ஜீன் மாதம் 14ஆம் திகதி சுகாதார அமைச்சர் உடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை வலியுறுத்தியிருக்கின்றேன்.

17ஆம் திகதி வெளிநாட்டு பயிற்சிகளை முடித்த மகப்பேற்று வைத்திய நிபுணர் குழுவொன்று வருவதாகவும் அதில், முன்னுரிமை அளிப்பதாகவும் அமைச்சர், தெரிவித்திருந்தார் என்று குறிப்பிட்ட அவர் இது மட்டுமல்ல, மயக்க மருந்து நிபுணர் இல்லாதநிலை காணப்படுகின்றது.

இதைவிட ஏனைய வைத்திய நிபுணர்களும் வெளிநாட்டு பயற்சிகளுக்குச்செல்லவேண்டிய நிலையில் இருப்பதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிரந்தரமான ஒரு வைத்தியநிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியத்துறையைப் பொறுத்தவரையில் ஆளணி என்பது மிகப்பாரிய பிரச்சியாக காணப்படுகின்றது.

அதாவது ஐந்து வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர்கள் என்ற அடிப்படையில் சேவையாற்றி வருகின்றனர்.

மூன்று வைத்;தியசாலைகளில் நிரந்தரமன வைத்தியர்கள் இல்லை என்று குறிப்பிட்ட அவர், மாவட்டப்பொதுவைத்தியாசலையின் நோயாளர் விடுதி வசதி மற்றும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers