முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை! வென்னப்புவ பிரதேசசபையின் தீர்மானம்

Report Print Sujitha Sri in சமூகம்

வென்னப்புவ - தங்கொட்டுவை வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு வென்னப்புவ பிரதேச சபையினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதமொன்று வென்னப்புவ பிரதேசசபையின் தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அப்பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொது சந்தை பகுதிக்கு வர ஏனைய மக்களும், வியாபார சமூகத்தினரும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

இதனையடுத்து வென்னப்புவ பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers