மொட்டுக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியின் ஆதரவாளருக்கு சொந்தமான கட்டடத்தில் சட்டவிரோத செயல்

Report Print Steephen Steephen in சமூகம்

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்னவின் நெருங்கிய ஆதரவாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினருமான தமித் தனஞ்சய என்பவருக்கு சொந்தமாக கட்டடத்தில் இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து களுத்துறையில் இயங்கிய இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

மிக நீண்ட காலமாக இயங்கி வந்த இந்த மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பாக மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து, விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரும், மதுவரி திணைக்கள அதிகாரிகளும் குறித்த இடத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers