மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

Report Print Steephen Steephen in சமூகம்

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இன்று மாலை நடந்த வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து அக்கரைபற்று நோக்கி சென்ற தனியார் பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 16 வயதான மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த இளைஞர்கள் சந்திவெளி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளார்.

Latest Offers