காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை வேண்டி மஹாயாக வேள்வி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் புகையிரத நிலைய வீதியிலுள்ள முதிரைத் தோட்டம் தேடி வந்த பிள்ளையார் ஆலயத்தில் மஹாயாக வேள்வியும் ஆன்மீக பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மஹா வேள்வி தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேள்வி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டியும், சுதந்திரமான வாழ்வு பெறவேண்டியும் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானைத் தேடிவந்து பிரார்த்தனையும், கூட்டு வழிபாடுகளும் மஹாயாக வேள்வியும், ஆன்மீகப்பிரார்த்தனையிலும் வழிபாடுகளிலும் தமது உறவுகளை நினைத்தும் நிரந்தரத் தீர்வு கிடைக்க வலியுறுத்தியும் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளையில் பிற்பகல் 12.00மணியளவில் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது போராட்ட இடத்தினை சென்றடைந்துள்ளனர்.

இந்நிகழ்வில் அருளுரையினை கொழும்பு, ஆன்மீக அருள் ஜோதி சர்வதேச இந்து குரு பீடாதிபதி ஸ்கந்தசாபசிவ சரவணபவ ஜயப்பதாசக் குருக்கள் ஆற்றியதுடன் அந்தணர்களும் சிவாச்சாரியார்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers