இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபரீதம்! மூன்று பெண்கள் பரிதாபமாக பலி - 6 பேர் காயம்

Report Print Murali Murali in சமூகம்

அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

தலாவ - மொரகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வான் ஒன்றும் லொரி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கல்நேவ பிரதேசத்தினை சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேன் ஒன்றும் அனுராதபுரம் தொடக்கம் தம்புத்தேகம நோக்கி பயணித்து கொண்டிருந்த லொரி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

வேனில் பயணித்த மேலும் 03 பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் லொறியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.