நாட்டு மக்களிற்கு பௌத்த தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

வஹாப் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரையும் அணி திரளுமான பௌத்த தேரர் ஒருவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி 3.30ஆம் நுகேகொட ஆனந்த சமரகோன் அரங்கில் பொது மக்களை ஒன்று கூடுமாறு இதுராகாரே தம்மரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையை அமெரிக்காவிடம் சிக்க வைப்பதற்கு இலங்கையில் செயற்படும் அரேபிய வர்த்தகர் மற்றும் அவர்களுடன் இணைந்துள்ள வஹாப்வாத பயங்கரவாதியை பாதுகாக்கும் அமைச்சர்கள், அமெரிக்க நிகழ்ச்சி நிரலை தலை மீது வைத்து கொண்டு வஹாப் இனவாத்தை வளர்ப்பவர்களுக்கு எதிராக பாரிய மக்கள் பேரணி ஒன்று நடத்தவுள்ளதாக தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் பேரணில் நாட்டு மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொது மக்கள் இணைந்து அதற்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.