உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் உருவாகியுள்ள புலம்பெயர் சமூகம்?

Report Print Kamel Kamel in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் புலம்பெயர் சமூகமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் முதல் முறையாக இவ்வாறு புலம்பெயர் சமூகமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து பிரான்ஸிற்கு தப்பி சென்று அரசியல் புகலிடம் பெற்றுக்கொண்ட 3 இஸ்லாமியர்களால் இந்த புலம்பெயர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், இந்த புலம்பெயர் சமூகம் நிதி திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த முஸ்லிம் புலம்பெயர் சமூகம் கடந்த வாரம் முதல் இஸ்லாமிய கடும்போக்காளர்களின் உதவிகளை பெற்று கொள்ள தொடங்கியுள்ளனர்.

இலங்கை முஸ்லிம்கள் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக குற்றம் சுமத்தி நிதி திரட்டி வருகின்றனர்.

இவர்கள் பொதுபல சேனா இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஜெனீவாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர் எனவும், இதற்கு இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் சமூகம் தமக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் புலம்பெயர் சமூகம் கூறியுள்ளதாக அந்த ஊடகத்தின் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள சமூகம், முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய முயற்சிப்பதாக ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு வெளிநாட்டு அரச சார்ப்றற நிறுவனமொன்றிற்கு பணம் செலுத்தி அவர்களின் பெயரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றுவதற்கு பதிவினையும் பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.