இராணுவத் தளபதியினால் நாட்டுக்கு பயனில்லை! கமால் குணரட்ன

Report Print Kamel Kamel in சமூகம்

பொலிஸாரின் தகவல் கிடைக்கும் வரையில் காத்திருக்கும் இராணுவத் தளபதியினால் நாட்டுக்கு எவ்வித பயனும் கிடையாது என ஓய்வு பெற்ற கொண்ட இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய இயக்கம் தொடர்பிலான தகவல்களை பொலிஸார் தமக்கு வழங்கவில்லை என அண்மையில் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்திருந்தார்.

இவ்வாறான விளக்கம் கூறும் ஓர் லெப்டினன் ஜெனரல் ஒருவர் இராணுவத் தளபதி பதவிக்கு பொருத்தமற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் அதிகளவான புலனாய்வு தகவல்களை கொண்ட நபராக இராணுவத்தளபதி காணப்படுகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதியின் கீழ் சுமார் மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட படையினர் புலனாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டு போரின் போது பொலிஸாரின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னிடம் வந்து புலனாய்வு தகவல்களை வழங்கும் வரையில் காத்திருக்கும் இராணுவத் தளபதியினால் நாட்டுக்கு பயன் எதுவும் கிடையாது என கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.