முந்திச் செல்ல முற்பட்டபோது படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா, பட்டியநூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் கடந்த 27ஆம் திகதி காலை 8.30 மணியளவில் மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபர் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்திற்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா - மஹமாறு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நஜிமுதீன் நிசார்தீன் என தெரியவருகிறது.

இவ்விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதி கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்த போது ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை படுகாயமடைந்தவர் உயிரிழந்தமை தொடர்பில் திருகோணமலை நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க உள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.