யாழ்.தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு முன்னால் கதறியழும் தாய்மார்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு இடம்பெறும் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு எதிரில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் அனுப்பப்பட்ட 20,000 ரூபா பணத்திற்காக வந்த கூட்டம் என தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அங்கு மிகவும் குழப்பகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டறிந்து தரக்கோரி வவுனியாவில் இருந்து வருகை தந்த காணாமலாக்கப்பட்ட உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் கதறியழுவதாகவும், சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.