வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வர்த்தக கைத்தொழில் சம்மேளன ஒன்றுகூடல்

Report Print Theesan in சமூகம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்திற்கான ஒன்றுகூடல் வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே.அமிர்தலிங்கம் தலைமையில் இந்த ஒன்றுகூடல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்காலத்தில் எதிர்நோக்கும் சவால்கள், வடக்கு - கிழக்கில் உள்ள வளங்கள், வியாபார விருத்தியினை எவ்வாறு மேற்கொள்ளுவது, பொருளாதார வீழ்ச்சியினை எவ்வாறு சீர் செய்வது என்பன தொடர்பாக தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு சம்மேளன தலைவர் ரீ.குலதீபன் இந்த ஒன்றுகூடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டிருந்ததுடன், இதில் வடக்கு - கிழக்கு பகுதிகளை சேர்ந்த வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தின் தலைவர்கள், உபதலைவர்கள், செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.