இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய நியமனங்கள்

Report Print Dias Dias in சமூகம்

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் உபதலைவராக யாழ். ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக பதுளை ஆயர் வின்ஸ்ரன் பர்னான்டோ ஆண்டகையும், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் உபதலைவராக யாழ். ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, சமாதானம், மனித முன்னேற்ற பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராகவும், நிதித்துறை ஆணைக்குழுவின் உபதலைவராகவும், துறவற உலக சபைகள் குருக்கள் குரு மாணவர்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் உபதலைவராகவும், லயனல் பி.இம்மானுவேல் அறக்கட்டளை நிதியத்தின் உபதலைவராகவும் யாழ். ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.