ஐ.நா மனித உரிமைகள் சபையின் 41ஆவது கூட்டத்தொடரில் தமிழின அழிப்பு நாள் நினைவுகூறல்

Report Print Dias Dias in சமூகம்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 41ஆவது கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை இடம்பெற உள்ள நிலையில் இதில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழர் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் மனித உரிமைகள் தளத்தில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் அமைப்புக்களுடன் இணைந்து, பல பக்கவறை நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒருகட்டமாக முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டு நினைவுதினம் 25 ஜூன் 2019 அன்று நினைவுகூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் தொடக்கமாக இதன்போது கலந்துகொண்ட பல்வேறு இனத்தவர்களால் தமிழின அழிப்பு நினைவுப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஈகைச் சுடரும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழர் இயக்கம் சார்பாக கலந்துகொண்ட பேச்சாளர்களால் இனவழிப்பு இடம்பெற்று 10ஆண்டுகளில் தமிழர்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும், வடமாகாண சபையின் தீர்மானத்தின் சுருக்கமும், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளில் வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வாசிக்கப்பட்டுள்ளது.

மேலும் எம்மைப் போன்று உரிமைக்காக போராடும் பல்வேறு இனங்களுடன் இணைந்து கீழ்வரும் தலைப்புகளில் பக்கவறை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்தும் இடம்பெற உள்ளன.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவுதினம் ( Remembrance of 10th Anniversary of Mullivaikal Genocide )

25 ஜூன் 2019, பி.ப 16:30 - 17:30

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ( Enforced Disappearance )

26 ஜூன் 2019, மு.ப 9:00 - 10:00

மோதல்களின் பின்னரான மனித உரிமைகள் ( Post Conflict and Human Rights )

26 ஜூன் 2019, பி.ப 17:00 - 18:00

இராணுவ அடக்குமுறையின் கீழ் பெண்கள் ( Women Under Occupation )

28 ஜூன் 2019, பி.ப 13:00 - 14:00

பாரிய அட்டூழியங்கள் மற்றும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் ( mass atrocities and Responsibility to protect )

28 ஜூன் 2019, பி.ப 15:30 - 16:30

சுயநிர்ணய உரிமை ( Right to self-determination )

1 ஜூலை 2019, பி.ப 15:00 – 16:00

இலங்கையில் மனித உரிமைகள் ( Human Rights in Sri Lanka )

2 ஜூலை 2019, மு.ப 11:00 – 12:00

பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு ( Women human rights defenders' protection )

3 ஜூலை 2019, பி.ப 15:30 – 16:30

இனஅழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ( Genocide and crimes against humanity )

5 ஜூலை 2019, மு.ப 12:30 – 13:30

அகதிகளின் மனித உரிமைகள் ( Refugees’ human rights )

8 ஜூலை 2019, மு.ப 15:00 – 16:00

காணாமலாக்கப்படுதலும் தண்டனைகளிலிருந்து தப்பித்தலும் ( Impunity and disappearances )

8 ஜூலை 2019 , பி.ப 16:00 – 17:00

இம்முறை இடம்பெறும் கூட்டத்தொடரின் சிறப்பம்சமாக ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16 மாணவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தமிழர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களில் எமது பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமிழர்களின் பிரச்சினைகள், அவர்களிற்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் இயக்கம் எச்சந்தர்ப்பத்திலும் எம் தாய்த் தமிழ் உறவுகளுடன் கைகோர்த்து நிற்கும் எனவும் சர்வதேச அரங்குகளில் தமிழர்களின் குரலாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் எனவும் உறுதிபடக் கூறியுள்ளது.

Latest Offers