தாய்லாந்தில் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் குடியேறிகள் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

தாய்லாந்தின் மே ஹோங் சன் மாகாணத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 6 மியான்மர் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களை கடத்தி வந்த 36 வயதுடைய தாய்லாந்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் குறித்த நபர் சென்றுக்கொண்டிருந்த பொழுது, அவருடன் பயணித்த மியான்மர் முறையான ஆவணங்களை வழங்காததன் மூலம் இக்கடத்தல் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நபர் மீது ஆட்கடத்தல் வழக்கும், 6 மியான்மரிகள் மீது சட்டவிரோத தாய்லாந்துக்குள் நுழைந்ததாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கையின் பின்னர், மியான்மர் குடியேறிகள் நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், தாய்லாந்தில் 200க்கும் மேற்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோத குடியேறிகள் உட்பட 500 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.