வவுனியா கோமரசங்குளத்தில் பதட்ட நிலை! இருவர் தப்பியோட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன், தப்பித்து சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கோமரசங்குளத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி குறித்த பெண், கணவர் மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

மேலும் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் கோமரசங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பின்பகுதியிலிருந்த பெண் மீது தடியினால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லிடவின் யாழினி என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.