மூதூர் வர்த்தக சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர் வர்த்தக சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று வர்த்தக சங்கத்தின் தலைவர் நசீர் நஜாவின் தலைமையில் மூதூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது மூதூர் பிரதேசத்தின் குறை நிறைகள் பற்றி பல ஆக்க பூர்வமான கருத்துக்களை தலைவர் முன்வைத்த போது, அனைவரும் அதற்கு ஒத்துழைத்து தலைவரின் புதிய திட்டங்களை மகிழ்ச்சியோடும் வரவேற்றார்கள்.

முதல் கட்டமாக மூதூர் வர்த்தக சங்கத்தில் மூதூரில் உள்ள அனைத்து வியாபாரஸ்தளங்களும் பதிவுகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். அதற்கான விண்ணப்பங்களும் முன்வைக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் வர்த்தக சங்கத்தின் யாப்பு, பதிவு பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

மூதூரில் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான தீர்வு காலப்போக்கில் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

முதல் கட்டமாக மூதூரில் உள்ள அனைத்து வியாபார தளங்களும், வர்த்தக சங்கத்திற்குள் உள்வாங்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.