கந்தளாய் பேராரு மேற்கு பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு

Report Print Gokulan Gokulan in சமூகம்
21Shares

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பேராரு மேற்கு பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு இடம்பெற்றுள்ளது.

குறித்த குழு தெரிவு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கட்சியின் தொண்டர்களைக் கொண்ட இக் குழுவானது இன்று கந்தளாய் ஆயிஸா வித்தியாலயத்தின் மண்டபத்தில் இடம்பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அபிவிருத்திகள் உட்பட வாழ்வாதாரம், இளைஞர் அணி, பெண்கள் அணி, கல்வி, கலை, கலாசாரம் உட்பட இன்னும் பல பிரிவுகளும் உள்வாங்கப்பட்டன.

குறித்த மத்திய குழு தெரிவில் கந்தளாய் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சட்டத்தரணி மதார், சட்டத்தரணி பௌமி, மத்திய குழு தலைவர் றியாஸ், வட்டார வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.