இளைஞர்கள் கட்சி கொள்கைகளுடன் வளர்க்கப்பட வேண்டும் - சுப்பிரமணியம் சுரேன்

Report Print Arivakam in சமூகம்

இளைஞர்கள் கட்சி கொள்கைகளுடன் வளர்க்கப்பட வேண்டுமே தவிர அவர்களுக்கு பதவிகளை காட்டி வளர்க்க கூடாது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் செயலாளரும் ஆகிய சுப்பிரமணியம் சுரேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் மாநாடு இன்று கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் சோயோன் தலைமையில், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து உரையாற்றும்போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,

தலைவர்கள் இளைஞர்களுக்கு கொள்கை பற்றை வளர்க்க வேண்டுமே ஒழிய அவர்களை கொள்கை பற்றற்று வெறும் பதவிகளுக்காக வளர்க்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தவிசாளர்கள், உபதவிசாளர், உறுப்பினர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.