தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் தந்தை செல்வா கலையரங்கம் திறந்து வைப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் இந்த கலையரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு கலையரங்கத்தை நாடா வெட்டி திறந்து வைத்துள்ளார்.

பாடசாலை அதிபர் எழில் வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers