விசேட அதிரடிப்படை சிப்பாய் கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை இராணுவத்தில் விசேட அதிரடிப்படை பயிற்சி நிறைவு செய்துவிட்டு திரும்பிய அதிகாரி ஒருவரை மர்ம நபர்கள் சிலர் அடித்து கொலை செய்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தில் பயிற்சி பெற்று மாவனெல்ல பொலிஸ் பிரிவில் வசிக்கும் ரொஷான் என்ற 23 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வருடமாக இலங்கை இராணுவத்தில் பயிற்சியை நிறைவு செய்துவிட்டு நேற்று மாவெனல்ல பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வருகைத்தந்துள்ளார். இந்த அதிகாரி தனது கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் நீண்ட காலம் காதல் தொடர்பில் இருந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த இளைஞன் முதல் முறையாக இன்று தனது கடமைக்கு செல்லவிருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காதலியை பார்ப்பதற்காக தனது வீட்டிற்கு தனியாக சென்றுக் கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர்கள் சிலர் அவர் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த அதிகாரி உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதன்போது அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.