யாழில் அதிகாலையில் ஏற்பட்ட கோரச் சம்பவம் - இருவர் பலி

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் உயிரழந்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணையினை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் லொறியினை செலுத்திவந்த சாரதி மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறினர்.