ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

Report Print Kamel Kamel in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒன்பது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளவர்களில் மூன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடமையை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவே இவர்கள் மீது பிரதானமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.