தமது பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது பேஸ்புக்

Report Print Vethu Vethu in சமூகம்

உலகம் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைத்தளங்கள் முடங்கியமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வருத்தத்தை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், வட்ஸ்அப், இஸ்ட்ராகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தளங்களே இவ்வாறு முடங்கியுள்ளன.

பேஸ்புக் நிறுவனத்திடம் உள்ள சிக்கல் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் சமூக வலைத்தளங்கள் முடங்கியமை தொடர்பில் பயனாளர்களிம் மன்னிப்பு கோரியுள்ளது.

நேற்று இரவில் இருந்து உலகம் முழுவதும் பேஸ்புக், வட்ஸ்அப், இஸ்ட்ராகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியமை குறிப்பிடத்தக்கது.