இலங்கை வங்கி ஊழியர்களினால் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Report Print Mubarak in சமூகம்

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய ஊழியர்கள், ஊழியர் நலன்புரியின் மீது வரி அறவிடுவதனை உடன் நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஓய்வூதியக் கொடுப்பனவு வழுக்களை திருத்துக, ஏற்றுக் கொள்ளக்தக்கதொரு ஓய்வூதியத்தினை ஏற்படுத்து மற்றும் இல்லாமல் ஆக்கப்பட்ட ஒய்வூதியத்தினை திருத்து போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன், இதன்போது பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.