நிறைவுக்கு வந்தது புகையிரத ஊழியர்களின் போராட்டம்

Report Print Malar in சமூகம்

புகையிரத ஊழியர்களினால் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து இப்பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவருக்கு எதிராக பொது முகாமையாளர் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதனை தடுக்க போக்குவரத்து அமைச்சு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்து, இலங்கை புகையிரத நிலைய சாரதிகள் தொழிற்சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்ப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பயணிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.