வவுனியாவில் உள்ள பாடசாலை மைதானத்தில் தீ பரவல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஈரப்பெரிகுளம், அலகல்ல வித்தியாலய பாடசாலை மைதானம் தீ பரவலுக்கு உள்ளாகி எரிந்து நாசமடைந்துள்ளது.

பாடசாலைக்கு அருகே காணப்பட்ட வெற்றுக்காணிக்கு இன்று பிற்பகல் வைக்கப்பட்ட தீ பாடசாலை மைதானத்திற்குள் பரவியுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

பாடசாலை அதிபரினால் வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீ அணைப்பு பிரிவினர் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.