பாடசாலைகளில் இராணுவத்தினரே வரவேற்கின்றனர்! சிறீதரன்

Report Print Yathu in சமூகம்

தமிழ் இனத்தையே அழித்தவர்கள், இனப் படுகொலையை செய்தவர்கள் இன்று நற்பெயரை எடுப்பதற்காக இவ்வாறு நல்லவர்கள் போல் தம்மை காட்டிக்கொள்ள முனைகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் 84 லட்சம் பெறுமதியான புதிய செயற்பாட்டு வகுப்பறை கட்டடம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இன்றும் நாம் பாடசாலைக்கு வருகை தரும் போது படையினரே எம்மை வரவேற்கின்றனர்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதிகளில் இவ்வாறு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால் இங்குள்ள பாடசாலைகளில் இவ்வாறு கடமையில் ஈடுபடுகின்றனர்.

பிள்ளைகளே, உங்கள் பெற்றோரிடம் கேட்டுபாருங்கள். எத்தனை அப்பாக்களை கொன்றவர்கள், எத்தனையோ சகோதரர்களை கொன்றவர்கள், தமிழ் இனத்தையே அழித்தவர்கள், இனப் படுகொலையை செய்தவர்கள் இன்று நற்பெயரை எடுப்பதற்காக இவ்வாறு நல்லவர்கள் போல் தம்மை காட்டிக்கொள்ள முனைகின்றனர்.

மொழி தெரியாதவர்கள் இவ்வாறு உதவி செய்வதுபோல் தம்மை காட்டிக்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.