விடுதலைப்புலிகளின் போராட்ட ஒழுக்க விழுமியங்கள் எதிரிகளுக்கும் பெருமையை தந்துள்ளன! ஞா.சிறிநேசன்

Report Print Kumar in சமூகம்

எதிரிகளும் பெருமைப்படும் வகையிலேயே விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒழுக்க விழுமியங்களுடன் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எங்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக வந்தவர் ஒரு ஒழுக்க விழுமியத்திற்குள் இருந்த போராட்டத்தினை கொச்சைப்படுத்த நினைப்பது அவரது அறிவு பலவீனத்தையே காட்டுகின்றது.

ஒரு நாட்டின் தளபதியே ஒழுக்க சீலர்கள் என்று ஏற்றுக்கொண்ட ஒரு தலைமைத்துவத்தினை ஒரு நாட்டின் தலைவர் கொச்சைத்தனமாக மலினப்படுத்துவது என்பது தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் செயல், நன்றி மறந்த செயலாகும் என்றார்.

இதன்போது சிறப்பு அதிதிகளாக மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கல்வி பணியக உதவி மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

You My Like This video