ஞானலிங்கேச்சுரத்தில் முப்பெரும் நகரங்களின் தலைவர்கள்

Report Print Dias Dias in சமூகம்

ஐரோப்பியப் பெருவலு நாடுகளின் முப்பெரும் நகரங்களின் தலைவர்கள் இன்று சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் ஒன்று கூடியுள்ளனர்.

யேர்மன் நாட்டின் பேர்லின் தலைநகரின் தலைவரான மிக்கெல் முல்லெர், அவரது அரசியல் மதியுரைஞர் ஜனிக் எல்வைன் மற்றும் சுவிற்சர்லாந்திற்கான யேர்மன் நாட்டுத் தூதுவர் நெபேர்ட் றீடெல், அவுஸ்திரேலிய நாட்டின் வியன்னா நகரின் தலைவர் மற்றும் தலைமைச் செயலரான மிக்கெல் லூட்விக் மேலும் பலர் இதன்போது ஒன்று கூடியுள்ளனர்.

பல் சமய இல்லத்தின் தலைவராக இப்போது விளங்கும் தாவித் லொயிற்வில்லெர் 2020ம் ஆண்டு முதல் பேர்ன் மாநிலத்தின் சமய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியாக புதிய பொறுப்பினை ஏற்கவுள்ளார். இவர் மூன்று பெரு நகரிங்களின் தலைவர்களை ஞானலிங்கேச்சுரத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

தமிழ் அருட்சுனையர் திருநிறை சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் இவர்களை வரவேற்று திருக்கோவிலையும், தமிழர் வழிபாட்டு முறைமையினையும் எடுத்து விளக்கியுள்ளார்.

மேலும் கோவிலுக்குள் அமைந்திருக்கும் ஈழ நாட்டின் வரைபடத்தினையும், தமிழர்களின் புலம்பெயர் வரலாற்றுச் சுருக்கத்தினையும் எடுத்துரைத்துள்ளார்.

இக்கோவில் மேல் மாடியில் அமைந்திருக்கும் தமிழர் களறி வரலாற்று ஆவணக்காப்பகம் தொடர்பான செய்தியும், கார்த்திகை மாதம் 2019 சிறப்பு அறிமுகநாளையும் நினைவுபடுத்தி நேரடி அழைப்பினை விடுத்துள்ளார்.

மேலும் குறுகிய நேரத்தில் இச்சந்திப்பு அமைந்திருந்த போதும் நீண்ட பதிவினை ஏற்படுத்திய நிறைவினை அளித்ததாக விருந்தினர்கள் தமது கருத்தினைப் பகிர்ந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.