ஐ.எஸ் பயங்கரவாதமென்பது உலக நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்துவதே!

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஐ.எஸ் பயங்கரவாதமென்பது உலக நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கமெனவும், மேற்கத்தேய நாடுகளால் உருவாக்கப்பட்டதே இந்த பயங்கரவாத இயக்கமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகறூப் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசகர்களுக்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகறூப் ஆகியோர்களுக்குமிடையில் கிண்ணியா அலுவலகத்தில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் ஆலோசகர்களான மேரி ஜோஷ்சே, பீற்றர் பன்டி போன்றோர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் தங்களது கட்சி சார்ந்த முன்னெடுப்புக்கள் , முஸ்லிம் அமைச்சர்களின் பதவி இராஜினாமா தொடர்பான விடயங்கள் தொடர்பில் அரசியல் ஆலோசகர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வண்மையாக கண்டிப்பதாகவும், சஹ்ரான் எனும் பயங்கரவாதி ஒரு முஸ்லிம் அல்ல.முஸ்லிம் ஒரு போதும் தற்கொலை தாக்குதலை செய்யமாட்டான்.

முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்திருக்காவிட்டால் நாட்டில் பாரிய கலவரம் ஏற்பட்டிருக்கும். அதனாலேயே கட்சி பேதமின்றி அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்து விட்டு அரசாங்கத்துக்கு சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.

அபாயா விவகாரம், பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல் போன்றவற்றை, கோரிக்கையிட்டு அபாயா விவகாரம் பிரச்சினைக்கு முடிவு எட்டியுள்ள நிலையில் ஏனைய விடயங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஏனைய 200 க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும் இது தவிர பல கோரிக்கைகளும் நிறைவேறும் வரை பதவிகளை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.