வைத்திய தொழிற்சங்கம் நீதிக்கு முரணான வகையில் அரச முத்திரை பொறிக்கப்பட்டவைகளை எவ்வாறு பாவிக்க முடியும்?

Report Print Sinan in சமூகம்

சிவில் சமூக செயற்பாட்டாளரான சமன் ரத்னபிரிய மற்றும் அவரின் கூட்டத்தினர் அரச முத்திரை, அரச கொடி, பௌத்த கொடி இவை மூன்றையும் பாவித்து நாடு முழுவதும் சென்று பதாதைகளை அமைத்துக் கொண்டிருக்கின்றனர் என அரச மருத்துவ நிர்வாக அதிகாரி ஹரிதா அலுத்ஜே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இன்று அமைச்சர் ராஜித சேனாரத்ன சம்பந்தமாக கூறிக்கொள்வது ஆகக் கூடிய நீதிக்கு முரணான விடயமாக ஒரு கூட்டுத்தாபனமாக செயற்படுகின்ற வைத்திய தொழிற்சங்கம் தேசிய கொடி, பௌத்த கொடிகளை பயன்படுத்தி தனிப்பட்ட நபரின் புகைப்படங்களை உள்வாங்கி பாவித்து கொண்டிருக்கிறனர்.

இவர்கள் எப்படி அரச முத்திரை பொறிக்கப்பட்டவைகளை பாவிப்பார்கள்? இவை அனைத்தும் நீதிக்கு புறம்பானவை. இது தொடர்பாக உரியவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.