வவுனியா பட்டகாடு பகுதியில் தீ விபத்து: இரு மாடுகள் தீயில் கருகி உயிரிழப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனினும் மாட்டு கொட்டகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன்,இதில் இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ளன.

குறித்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், வவுனியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers