இலங்கை மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கை மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அந்த வகையில், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறே கோரப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், தகவல் தெரிந்தவர்கள் அறிவிப்பதற்கு 1984 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.