யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டவர்களின் சொர்க்காபுரியாக மாறவுள்ள முக்கிய பகுதி!

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணம், மண்டைதீவு கடலோரப் பகுதியை அபிவிருத்தி செய்து சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக அந்த வலயம் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளுக்காக தற்சமயம் திறக்கப்பட்டுள்ளது.

படகுச் சேவை உள்ளிட்ட வசதிகள் அங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் இந்தப் பகுதிக்குக் கொண்டு வருவது இதன் நோக்கமாகும்.