பாடசாலைக்குள் நுழைய முற்பட்டு துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய தந்தை! வெளியாகியுள்ள புதிய தகவல்

Report Print Sujitha Sri in சமூகம்

மாத்தறை - அக்மீமன ஆரம்ப பாடசாலைக்குள் நுழைய முற்பட்ட தந்தையொருவர் நேற்றைய தினம் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் அவர் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்தே இறந்த நபர் தொடர்பான சில விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான களுதொட்டகே உதய பிரதீப் குமார (39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பிலான பிரதேசத்தைச் சேர்ந்த இவர், கடற்படை இசைக்குழுவின் ஓய்வுநிலை அதிகாரி எனவும் குறிப்பிட்டுள்ளார்.