பூஜித் ஜயசுந்தர பணி இடைநீக்கம்?

Report Print Steephen Steephen in சமூகம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணி இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

நியமனத்தை வழங்கிய ஜனாதிபதியால் பணி இடைநீக்கம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. அத்துடன் பூஜித் ஜயசுந்தர சம்பந்தமாக பொலிஸ் திணைக்களம் உள்ளக விசாரணைகளை நடத்த முடியும். அந்த விசாரணைகளில் அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவியை வழங்க வேண்டும்.

இப்படியான நிலைமையில், பொலிஸ் மா அதிபராக வேறு ஒருவரை நியமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர, கொலை செய்தமை மற்றும் அதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில், குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர, சிறைச்சாலை அதிகாரிகள் காவலின் கீழ், நாராஹேன்பிட்டியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்