உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட கரும்புலிகள் தினம்

Report Print Yathu in சமூகம்

தமிழர்களின் வரலாற்றுக்களை கடைப்பிடிக்க வேண்டிய, அதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடத்திலும் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் கரும்புலிகள் நாள் இன்று உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களினுடைய வரலாறு தற்போது அழிக்கப்பட்டு வருகின்றது. இந்த வரலாறுகளை கடைப்பிடிக்கவேண்டிய அதனை அடுத்த கட்டத்துக்கு கடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு எல்லோரிடத்திலும் உள்ளது. இதில் இருந்து நாங்கள் தவறிச் செல்கின்றோம் அல்லது விலகிச் செல்கிறோம் என்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது.

இந்த உயிராயுதமான கரும்புலிகள் அவர்களுடைய வாழ்க்கை மறக்க முடியாத ஒன்றாகும் ஒவ்வொரு மாவீரர்களின் கனவுகளுக்கு பின்னாலும் பல்வேறுபட்ட தார்ப்பரியங்கள் உள்ளன அந்தப் பெரும் தியாகமும் இன்று இருக்கின்ற சமூகத்துக்கு கடத்தப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தற்கொடையாக தம் உயிர் நீத்த கரும்புலிகளின் நினைவுநாள் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கிளிநாச்சியில்அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, மற்றும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், எனப்பலர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

Latest Offers