ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை அவசியம்: எம்.கே.சிவாஜிலிங்கம்

Report Print Malar in சமூகம்

யாழ்.தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அக்கட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர்,

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேராளர் மாநாடு இடம்பெற்றிந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கைளை இலங்கை தழிரசு கட்சி எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் நடந்துகொண்ட விதமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.