யாழ்.சிறைச்சாலையில் போதைப்பொருள் பரிமாறத் திட்டமிட்ட பெண்.... இறுதியில்?

Report Print Sumi in சமூகம்

சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.உடுவில் மல்வத்தைப் பகுதியில் வைத்து நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8.4 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு கொண்டு செல்வதற்காக, வேறு நபரிடம் இருந்து வாங்கிச் சென்றுள்ளதாக குறித்த பெண் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers