மட்டக்களப்பு கிரான் பகுதியில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்: இருவர் பலி

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு, கிரான் பகுதியில் அதிகரித்து வரும் யானைகளின் அட்டகாசம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

யானை தாக்குதலுக்கு இலக்காகி இன்று இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய கிண்ணயடி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் கிரிதர்சன் என தெரியவந்துள்ளது.

கிரான் பகுதியில் நேற்று யானை தாக்கியமையினால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொண்டயன்கேணி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சின்னத்தம்மி கந்தசாமி எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யானைகளின் தொல்லை காரணமாக விவசாயிகளும், கால்நடை வளர்ப்பாளர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

Latest Offers