அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு உத்தரவு

Report Print Kamel Kamel in சமூகம்

சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் தப்புல லெவேரா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, நிசாங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளனர்.

நிதி மோசடி தொடர்பில் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.