பெண்ணுடன் நடனமாடும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்

Report Print Steephen Steephen in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க மற்றும் பிரபல மருத்துவர் காலோ பொன்சேகாவின் மகள் டானியா ஆகியோர் ஜோடியாக ஆடும் நடனம் சம்பந்தப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வைபவம் ஒன்றில் இவர்கள் நடனமாடியுள்ளனர். இந்த காணொளியை ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நடனமாடும் காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

மருத்துவர் காலோ பொன்சேகா, காலஞ்சென்ற நடிகர் விஜய குமாரதுங்க மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.